“தென்மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” - கனிமொழி எம்.பி.

“மத்திய அரசு விவசாயிகளுக்கு மானியம் தருகிறேன் என்று சொல்லியிருக்கக்கூடிய அந்த தொகையானது குறைந்துக்கொண்டே வருகிறது” - கனிமொழி எம்.பி.
கனிமொழி
கனிமொழிபுதிய தலைமுறை

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்திற்கு பின் எம்.பி. கனிமொழி செய்தியாளார்களை சந்தித்து பேசுகையில், “இதுவரை பாஜகவின் இரண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் இந்த அரசு யாருக்கும் எதுவும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு மானியம் தருகிறேன் என்று சொல்லியிருக்கக்கூடிய அந்த தொகையானது குறைந்துக்கொண்டே வருகிறது.

அதுபோல தென்மாநில ரயில் திட்டம் குறைந்துகொண்டே வருகிறது. கல்விக்கான நிதியும் குறைந்துகொண்டே வருகிறது. மத்திய அரசின் தேர்தல் வாக்குறுதிகளை அவர்களே நிறைவேற்றவில்லை.

அதேபோல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, இதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அது இன்னும் நடைமுறைபடுத்தப்படவில்லை. இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில், இந்த ஒன்றிய அரசுடன் சேர்ந்து நாம் பயணிக்கப்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கனிமொழி
“நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டுவோம்” - எம்.பி கனிமொழி பேச்சு

சென்னை மழையால் பாதிக்கப்பட்டது. அதே போல் தென்மாவட்டங்களும் அதிக மழையால் பாதிக்கப்பட்டது. இன்றுவரை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்பட்ட நிவாரணங்கள் எல்லாம் நம்முடைய முதலமைச்சர்தான் தந்துகொண்டிருக்கிறார்.

மத்திய அரசிலிருந்து இரண்டு அமைச்சர்கள் சென்னையையும் தென்மாவட்டங்களையும் பார்வையிட்டு சென்றார்கள். ஆனால் இன்று வரை ஒரு பைசா தரவில்லை. தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

அதே சமயம் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறோம். மகளிருக்காக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது ஒரு பெரிய திட்டம்” என்று கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com