“நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டுவோம்” - எம்.பி கனிமொழி பேச்சு

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். அதற்கு I.N.D.I.A கூட்டணியின் வெற்றியாக இருக்கும்” என்று எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.
MP Kanimozhi
MP Kanimozhifile

செய்தியாளர்: சங்கர நாராயணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘I.N.D.I.A கூட்டணி வெல்வது நிச்சயம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், எம்பி கனிமொழி, சிறுபாண்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு I.N.D.I.A கூட்டணியை ஆதரித்து பேசினர்.

Kanimozhi MP
Kanimozhi MPpt desk

அப்போது எம்பி கனிமொழி பேசியபோது... “வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் இல்லையென்றால் இந்தியா என்ற நிலைமையே இல்லாமல் போய்விடும். இந்த நாட்டில் யாருமே பாஜகவினரை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது. யாரிடமும் கலந்து ஆலோசிக்காமலேயே விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றுகின்றனர், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

MP Kanimozhi
”சதியை முறியடித்துவிட்டோம்” - அவையில் ஹேமந்த் சோரன்; நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் வெற்றி!

இந்த ஆட்சி மீண்டும் வந்தால், ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள். பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜ்ஜியம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு ராம ராஜ்ஜியம், அது மோடி ராஜ்ஜியம், ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியம். தமிழ்நாட்டில் இருக்கும் நமது கனவு, ராமசாமி ராஜ்ஜியம், ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியம். அந்த ராஜ்யத்தை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம். அதுவே I.N.D.I.A கூட்டணியின் வெற்றி” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com