\
கோவை 10 வயது சிறுமி கொலை
கோவை 10 வயது சிறுமி கொலைpt

10 வயது சிறுமி கொலை| ’கூடவே இருந்து அவனும் தேடினான்..’ கண்ணீருடன் பேசிய சிறுமியின் தாய்!

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
Published on
Summary

கடைக்கு சென்றதாக கூறி வெளியேறிய 10 வயது சிறுமி, அண்டை வீட்டுக்காரரான கார்த்திக் வண்டியில் ஏற்றி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் வெளிவந்துள்ளது. நண்பர் மோகன்ராஜ் உடன் சேர்ந்து குற்றத்தை மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. காணாமல் போன நேரத்தில் கூட குற்றவாளி தேடலில் கலந்து கொண்டதாக தாய் வலியுடன் கூறியுள்ளார். உறவினர்களின் போராட்டத்துக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைபுதியதலைமுறை

இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து உறவினர்களின் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்குமண்டல ஐஜி உறுதிப்படுத்தியுள்ளார்.

கோவை 10 வயது சிறுமி கொலை
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!

சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி..

குற்றச்சம்பவம் எப்படி நடந்தது என்று பேசிய சிறுமியின் தாய், “பாப்பா கடைக்கு போயிட்டு வரன்னு போனா, மிட்டாய் எதோ வாங்கி கொடுத்துட்டு வண்டில ஏறுன்னு சொன்னதும் ஏறி போய்ட்டா போல, பக்கத்துல குடியிருந்து காலி பண்ணவன் தான். அதனால தெரிஞ்சவன் தான்னு ஏறி போயிருக்கா, கொண்டுபோய்ட்டு இப்படிலாம் பண்ணிட்டான். மறுநாள் எங்க கூட சேர்ந்து அவனுமே பாப்பாவ தேடிட்டு இருந்தான், அவன் மேல எங்களுக்கு சந்தேகம் இருந்தது.

பக்கத்துல தான போனா சீக்கிரம் வந்துடுவான்னு பார்த்தோம், ஆனா வரல அரைமணி நேரம் தேடுனதுக்கு பிறகு போலீஸ்க்கு சொல்லிட்டோம். அவங்களும் தேடுனாங்க, அப்பவும் கூட சுத்திட்டே அந்த வண்டில போனா பாப்பா, இந்த வண்டில போனானு சொல்லிகிட்டு இருந்தான். அவன் மட்டுமில்லாம அவனோட பொண்டாட்டி, அந்த பொம்பளையோட தம்பி 3 பேருமே சேர்ந்துதான் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்ல, நாங்க அங்க குடிபோன 10 நாள்ல அவங்க காலி பண்ணிட்டு போயிட்டாங்க.

என்ன பண்ணாங்கனு தெரியலே சார், அடிச்சி கொன்னுருக்காங்களே, என் புள்ள வலியே தாங்காதே சார்” என கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் நெஞ்சை கனமாக்கியது.

கோவை 10 வயது சிறுமி கொலை
10 வயது சிறுமி கொலை | வன்கொடுமை செய்தது உறுதி.. அதிர்ச்சி வாக்குமூலம்! ஐஜி ரம்யா பாரதி விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com