\
crime against women
crime against women web

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!

காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளது.
Published on

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்மணி பணி முடிந்து பேருந்துக்காக நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அப்பெண்மணிக்கு நண்பராகக் கருதப்படும் இருவர், அந்தப் பெண்ணை வீட்டில் விடுவதாக காரில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சாலையிலேயே விட்டுச்சென்றுள்ளனர்.

accused
accused web

அப்போது அவ்வழியாகச் சென்ற பெண் காவலர் ஒருவர், சம்பந்தப்பட்ட பெண்ணைப் பார்த்து விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றஞ்சாட்டிய நபர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட மாரிமுத்து மற்றும் ஏ.சேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com