கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில்.. 1 1/2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை! தாய் கைது!
சேலம் மாவட்டத்தில் ஒன்றரை வயது புஷ்பராஜ் என்ற குழந்தை மரணம் வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, தாய் லலிதா மீது கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக குழந்தை இடையூறாக இருந்ததாக, கொலை செய்துவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் தெற்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன், இவரது மனைவி லலிதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக லலிதா தனது தாய் வீடான சிறுவாச்சூரில் வசித்து வருகிறார். மூத்த பிள்ளை தந்தையோடும் ஒன்றை வயது கைக்குழந்தையான புஷ்பராஜ், தாய் லலிதாவோடும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குழந்தை புஷ்பராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒன்றரை வயது குழந்தை புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணையில் லலிதாவிற்கும் அதே பகுதியை சார்ந்த இளைஞருக்கும் திருமணத்தை மீறி உறவு இருந்ததாகவும், அதற்கு குழந்தை இடையூறாக இருப்பதால் குழந்தைக்கு களைக்கொல்லி பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்துவிட்டு வலிப்பு ஏற்பட்டதாக தாய் நாடகமாடியது அம்பலமானது.
இந்தசூழலில் 2 மாதங்களுக்கு ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்த லலிதாவை தலைவாசல் போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் கேரளாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழகத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

