HEADLINES | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கை முதல் திமுகவை விமர்சித்த மோடி வரை!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்... பிரதமர் மோடி தலைமையில் ஒரே மேடையில் தோன்றிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள்...
ஆட்சி மாற்றத்துக்கு தமிழகம் தயாராகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு... திமுக ஆட்சியின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் ஆரம்பித்துவிட்டதாகவும் விமர்சனம்...
தமிழகத்தில் கரெப்ஷன், மாஃபியா, கிரைம் ஆட்சி நடப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஒவ்வொரு ஓட்டும் போதைப்பொருள் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்கும் என்றும் பேச்சு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு வாக்குவங்கி அரசியல் நடத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு... தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் திமுக எதிரி எனவும் விமர்சனம்...
தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்வதாக பிரதமர் மோடி விமர்சனம்... மாநில வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை எனவும் பேச்சு...
டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு பதிலடி... தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் பதிவு...
ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சியை நடத்திவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சிப்பதா என முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்... மதுரை, கோவை மெட்ரோ எங்கே என்று கேட்கும், நீங்கள் ஒழுங்கான ஆவணங்களை சமர்ப்பித்தீர்களா என்றும் கேள்வி...
திமுக ஆட்சிக்கான முடிவின் தொடக்கம் இந்நாள் என பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்... தகுதியற்ற, ஊழல் மற்றும் பூஜ்ஜிய அரசு திமுக அரசு என்றும் விமர்சனம்...
பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்துவிட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்... மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை எனவும் புகார்...
மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையில் கைகோத்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன்... ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக பெயரைக் குறிப்பிட்ட போது ஆரவாரம் செய்த அதிமுக, அமமுக தொண்டர்கள்...
அரசியல் லாபத்திற்காக பிரதமர் மோடி பொய்களை பேசியதாக திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்... குடும்ப அரசியல் குறித்து பேசும் பிரதமர், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் பின்னணி குறித்து பேசுவாரா என்றும் கேள்வி...
திமுகவை விமர்சித்த வைகோ மீண்டும் அதே கூட்டணியில் சேரவில்லையா?... தினகரன் குறித்த கேள்விக்கு எடப்பாடி கே.பழனிசாமி பதில்...
அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கு பின் முடிவு... தை முடிவதற்குள் உரிய பதில் அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேனியில் பேட்டி...
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கு... தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு மீது வரும் 27ஆம் தேதி தீர்ப்பு...
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணிப்பு...
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் 12 பேர் விடுதலை... 12 பேருக்கும் அபராதம் விதித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது மன்னார் நீதிமன்றம்...
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை... காலை சவரனுக்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி... திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்ட ரயிலுக்கு நெல்லையில் வரவேற்பு...
குஜராத்தை போன்று கேரளாவிலும் பாஜக ஆட்சி மலரும் என பிரதமர் மோடி பேச்சு... முதலில் வடமாநிலங்களின் பிரச்சினையை சரிசெய்துவிட்டு பின் தெற்கே வாருங்கள் என காங்கிரஸ் பதிலடி...
சிவசேனாவை பாஜகவால் ஒருபோதும் அழித்துவிட முடியாது.... கட்சியின் சின்னத்தையும் பெயரையும் திருடியவர்களால் தொண்டர்களின் உணர்வுகளைத் திருட முடியாது என்றும் உத்தவ் தாக்கரே பேச்சு...
ஜம்மு காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... சாலைகள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
அமெரிக்க கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வீசவுள்ள பனிப்புயலால் 15 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,000 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்...
உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா... 80 ஆண்டுகால பந்தம் முடிவுக்கு வந்ததால் உலக சுகாதார அமைப்புக்கு பின்னடைவு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ரஷ்யா - உக்ரைன் - அமெரிக்கா இடையிலான முதற்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு... போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டும் வழிகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்...
நியூஸிலாந்து உடனான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி... இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை...

