HEADLINES|பராசக்தியை எதிர்க்கும் காங்கிரஸ் TO ஒத்திவைக்கப்பட்ட விஜயின் சிபிஐ விசாரணை.!
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலும் தொடர்ந்த மழை... குளிர் காற்றுடன் பெய்த மழையால், மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவியது..
பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக அனைத்து பள்ளிகளுக்கும் 5 நாட்கள் விடுமுறை... நாளை முதல் 18ஆம் தேதி வரை விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு...
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்... ஆடல், பாடல், விளையாட்டு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்று உற்சாகம்...
பொங்கலை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை அரசுப் பேருந்துகளில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேர் பயணம்... கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்...
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... உதவி எண்களை அறிவித்தது போக்குவரத்துத் துறை....
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு... 3 லட்சத்து 40 ஆயிரம் ரேசன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு...
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் விசாரணை நிறைவு... கரூர் துயரம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அதிகாரிகள்...
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் இன்று நடைபெறவிருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு... டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் சென்னை திரும்புவார் என தகவல்...
கரூர் துயரம் தொடர்பாக தமிழக காவல் துறை உயரதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை... டெல்லி அலுவலகத்தில் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி நிர்மல்குமார் ஜோசி நேரில் ஆஜராகி விளக்கம்...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 12 லட்சத்து 51 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்... பெயர் நீக்கம் தொடர்பாக 26 ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்...
அதிமுக கூட்டணியில் மற்றொரு கட்சி ஒன்று ஓரிரு நாளில் இணையும்... நேர்காணலுக்கு வந்தவர்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு...
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம்... தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனை நடைபெறும் நிலையில் முக்கியத்துவம் பெறும் பயணம்...
ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல்தான் முடிவு எடுப்பார்கள்... ஆட்சியில் பங்கு இல்லை என்ற ஐ. பெரியசாமியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி...
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்லத்தி மரத்தை பார்க்கச் சென்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்... காவல்துறையினருடன் வாக்குவாதம்; ஹெச்.ராஜா உட்பட 12 பேர் கைது....
மும்பை நகரம் தொடர்பான அண்ணாமலையின் பேச்சுக்கு மஹாராஷ்டிராவில் வலுக்கும் கண்டனம்... ராஜ் தாக்கரேவை தொடர்ந்து ஆதித்யா தாக்கரே, சுப்ரியா சுலே, சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கண்டனம்...
யார் மிரட்டினாலும் மும்பை நகருக்கு மீண்டும் மீண்டும் வருவேன் என அண்ணாமலை ஆவேசம்... மும்பை நகர் தொடர்பான பேச்சுக்கு மஹாராஷ்டிராவில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பேச்சு...
தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் ஊழியர்களாக பணி அமர்த்தப்படுவர்... போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு....
புதுச்சேரியில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து... ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த எச்சரிக்கையால் உயிர்தப்பிய பயணிகள்.
கமல்ஹாசன் பெயர், படத்தை வர்த்தகரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை... ஆடை நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை பேசும் ‘பராசக்தி’ படத்துக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு... காங்கிரஸ் கட்சியையும், தலைவர்களையும் பொய்யான தரவுகளுடன் சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு...
இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஃப்ரெட்ரிச் மெர்சுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை... பயங்கரவாத ஒழிப்பு, தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட உறுதி....
அமெரிக்கா இல்லாவிட்டால், கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா கைப்பற்றிவிடும் என ட்ரம்ப் பேச்சு... உங்கள் நலனுக்காக பிறரை பகடைக்காயாக்காதீர்கள் என ட்ரம்ப்பிற்கு சீனா பதிலடி...
போருக்கு மட்டுமல்ல பேச்சுவார்த்தைக்கும் தயார் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு... மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்த நிலையில், திடீர் மாற்றம்...
அமெரிக்காவில் விமரிசையாக நடைபெற்ற கோல்டன் குளோப் திரைப்பட விருதுத்திருவிழா... அதிக விருதுகளை வென்ற 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' மற்றும் ஹேம்நட் திரைப்படங்கள்...

