Headlines | அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் முதல் கமல்ஹாசனின் மாநிலங்களவை பேச்சு வரை!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் உரை... குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் இன்று பேச திட்டம் என தகவல்...
நாடாளுமன்ற மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி. க்கள்... அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் இன்று அவசர ஆலோசனை...
உண்மையை எதிர்கொள்ள மோடி அஞ்சுவதாக ராகுல் காந்தி விமர்சனம்... பெண் எம்பிக்கள் பிரதமரை முற்றுகையிட்டதாக பாஜக குற்றச்சாட்டு...
பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் குற்றச்சாட்டு... பாஜக அரசின் தேர்தல் நேர ஸ்டண்ட் கூட தமிழ்நாட்டிற்கு இல்லை என்றும் விமர்சனம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்... இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு...
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டுவர வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமியிடம் மாவட்ட செயலர்கள் கோரிக்கை... தேமுதிக கேட்கும் 14 தொகுதிகளை ஒதுக்க முடியாததால்தான் இழுபறி என பழனிசாமி கூறியதாக தகவல்...
2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கிறது தேமுதிக... வெகு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்...
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி உறுதி... கல்விக்கடன், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய தள்ளுபடி செய்யப்படும் உட்பட அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள்... ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிதியுதவி வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவிப்பு...
விஜய் மக்களையும் பார்ப்பதில்லை; தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை... விஜய்யை முதலில் செய்தியாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள் என எடப்பாடி பழனிசாமி பதிலடி...
தவெக ஒரு அசெம்பிள் ஆகாத என்ஜின்... திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம்...
தமிழகத்தில் 3ஆவது கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது... கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டாலும் விஜய்க்கு 18 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என பிரவீண் சக்கரவர்த்தி கணிப்பு...
கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியலால் காங்கிரஸ் பலவீனமாகி வருகிறது என பிரவீண் சக்கரவர்த்தி கருத்து... பிரித்து பார்த்தால்தான் காங்கிரஸின் உண்மையான மதிப்பு தெரியும் என்றும் புதிய தலைமுறைக்கு பேட்டி...
திமுகவுடன் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என கூட்டணி கட்சிகளுக்கே தெரியும்... பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்து குறித்து கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்.
கூட்டணி தொடர்பாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி விளக்கம்... புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் முதல்வர் அறிவிப்பார் என்றும் பதில்...
தன்னை விமர்சிக்கும் தவெகவினருக்கு கடும் பதிலடி கொடுப்பேன் என அண்ணாமலை எச்சரிக்கை... விஜய்யை இன்னும் தாம் விமர்சிக்கவே ஆரம்பிக்கவில்லை என்றும் கருத்து...
கூட்டணி ஒரு பக்கம்; பாசம் இன்னொரு பக்கம் என குழப்பத்தில் இருக்கிறது காங்கிரஸ்... பிரவீண் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூட மாநில தலைமைக்கு துணிவில்லை என்றும் அண்ணாமலை விமர்சனம்...
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் முதல்வரே மன்னிப்பு கேட்டதாகத்தான் பொருள்.... யாரோ மேலிருந்து கொடுத்த அழுத்தத்தால் நீதிமன்றத்தில் வெட்கி தலைகுனிந்த அதிகாரிகள் என்றும் அண்ணாமலை கருத்து...
துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து... மீண்டும் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...
சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில் தமிழைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம்... இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்...
கவனம் பெற்ற கமல்ஹாசனின் மாநிலங்களவை பேச்சு... தமிழ் மொழி குறித்த பேச்சுக்கு பலரும் பாராட்டு...
சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோரது கோரிக்கைகளுக்கு முதல்வர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்... இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை...
தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு... விடுதலை இதழின் கட்டுரையை சுட்டிக்காட்டியே பேசியதாக ஆதாரங்களுடன் விளக்கம்...
எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சுதந்திரம் இந்தியாவிற்கு உள்ளது... இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ட்ரம்ப் பேசியிருந்த நிலையில் ரஷ்யா பதில்...
அமெரிக்கா, ரஷ்யா அதிபர்களுடன் ஒரேநாளில் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஷி ஜின்பிங்... பல்வேறு சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்...
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை... மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை நடக்கும் என ஈரான் அதிகாரப்பூர்வ தகவல்...
அமெரிக்காவின் மஸ்தியஸ்தத்துடன் நடந்த ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதி பேச்சுவாத்தை... அபுதாபியில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தகவல்...
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளை தாக்கிய லியோ புயல்... கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்... பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வளர்ப்பு பிராணிகளுக்கான கண்காட்சி... சாகசம் செய்து பார்வையாளர்களை கவர்ந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி... அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது...

