Pt Headlines
Pt HeadlinesPt web

Headlines | 89 மின்சார ரயில் சேவைகள் ரத்து to தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னை வருகை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 89 மின்சார ரயில் சேவைகள் ரத்து முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னை வருகை வரை விவரிக்கிறது.
Published on

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல்... மார்ச் 1ம் தேதி தென் தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கணிப்பு...

தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்... தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டையில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவும்... சேலம், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை...

சென்னை கடற்கரை, செங்கல்பட்டு வழித்தடத்தில் மொத்தமாக 89 மின்சார ரயில் சேவைகள் ரத்து... பணிகளை விரைந்து முடித்து ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை...

புறநகர் ரயில்
புறநகர் ரயில் pt web

சிக்னல் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவே ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம்.. பயணிகளின் சிரமத்தைக் குறைக்க எழும்பூர் - பரங்கிமலை மற்றும் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இயக்கம்..

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி... மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்...

மின்சார ரயில்கள் ரத்து விவகாரத்தில் தெற்கு ரயில்வே அலட்சியம் என அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு.... பயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக விளக்கம்...

சென்னை போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இறுதிகட்ட சோதனை தீவிரம்... பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தவுடன் விரைவில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு...

இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்... சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்வதுடன் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கவும் திட்டம்...

சட்டமன்ற தேர்தலில் 164 முதல் 170 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு... காங்கிரஸுக்கு 25 உட்பட கூட்டணி கட்சிகளுக்கு அதிகபட்சம் 70 தொகுதிகளே ஒதுக்கப்படும் என தகவல்...

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழுவை அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. வரும் 27ஆம் தேதி திமுகவுடன் பேச்சுவார்த்தை ..

சென்னையில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியதாக தகவல்..

கே. பழனிசாமி
கே. பழனிசாமிகோப்பு படம்

அதிமுகவிடம் 30 முதல் 35 தொகுதிகளை எதிர்பார்க்கும் பாஜக.. 72 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை வழங்கியுள்ளதாக தகவல்..

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் பயணத் திட்ட விவரம் வெளியானது.. மார்ச் 1ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடத்துகிறார்...

கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாமில் அரசால் கட்டப்பட்ட வீடுகளை திறந்துவைத்த முதல்வர்.... நிரந்தர குடியுரிமை பெற்றுத்தர போராடுவோம் என பதிவு....

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்பத்துக்கும் 10ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை... 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு...

10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை அல்ல; உதவித் தொகை... கருணை என்ற சொல்லாடலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் வாக்குறுதியில் மாற்றம் செய்தது அதிமுக...

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு... மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8ஆயிரம் ரூபாயிலிருந்து 12ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி...

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்... பிளஸ் 2 வரை படித்து பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என அதிமுக அறிவிப்பு...

புதிய கட்சித் தொடங்குவதாக கமுதி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் வி.கே. சசிகலா... அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்து உரை...

சசிகலா
சசிகலாweb

தான் முதல்வர் பதவியில் அமரவைத்தவர், எனது முதுகில் குத்தினார்... எடப்பாடி கே.பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்த வி.கே. சசிகலா...

பெங்களூரு சிறையில் இருந்தபோது தனக்கு பிரச்சினை கொடுக்கப்பட்டதாக வி.கே.சசிகலா குற்றச்சாட்டு... சென்னை சிறைக்கு மாறுவதற்கு மறுப்பு தெரிவித்ததால் உயிர் தப்பியதாகவும் பேச்சு...

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் வரும் புதிய கட்சிகளால் தங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை... வி.கே.சசிகலா புதிய கட்சி தொடங்கியது தொடர்பாக கேள்விக்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பதில்...

எந்த நிலையிலும் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்... என்ன தவறு செய்தேன் எனக் கூறினால் அரசியலைவிட்டே விலகுவதாகவும் சவால்..

4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3 ஆயிரத்து 760 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை... ஒரு கிராம் தங்கம் விலை 14,890 ரூபாய்க்கு விற்பனை...

தொடர்ந்து உயர்ந்து வந்த வெள்ளி விலை சற்று குறைந்தது... கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து, 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை...

ஆந்த்ரோபிக் ஏஐ மாடலால் இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் கடும் சரிவு... 2 மாதத்தில் எல்ஐசி நிறுவனத்துக்கு 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு...

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி... இருநாடுகள் இடையே தடையற்ற வர்த்தக இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு என தகவல்...

மோடி
மோடிpt web

ட்ரம்பின் அழுத்தம் காரணமாக அமெரிக்காவுடன் பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார்... அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்த நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயாரா என ராகுல்காந்தி சவால்...

கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை...

மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்களா' என மாற்றும் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது... கேரளாவுக்கு ஒரு நீதி, வங்காளத்துக்கு ஒரு நீதியா? என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி....

பனிப்புயலால் அமெரிக்காவில் குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்துள்ள பனியால் வெண்மையாக காட்சியளிக்கும் நகரங்கள்... மின்தடை, எரிபொருள் விநியோக பாதிப்பால் அமெரிக்கர்கள் திண்டாட்டம்...

பிரேசிலில் கனமழை, நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு... வீடுகளை இழந்த 400க்கும் மேற்பட்டோர், தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு...

காஸாவில் பெய்த கனமழையால் அகதிகள் முகாம்களை சூழ்ந்த தண்ணீர்... கூடாரங்களுக்கு வெளியே தேங்கி நிற்கும் நீரை அகற்றும் பணியில் பாலஸ்தீனியர்கள் மும்முரம்...

இரானிய பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தீவிரம்... மாணவர்கள் நாட்டின் கண்ணியத்தை மீறும் வகையில், தேசியக் கொடியை அவமதிக்கக்கூடாது என அரசு எச்சரிக்கை...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபாரம்... 50 பந்துகளில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஹேரி புரூக்..

நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு... அனிருத்தின் அதிரடி இசையில் இணையத்தை கலக்கும் ஆயா ஷேர் பாடல்...

Pt Headlines
"ஏன் அழுகிறாய்? அது வெறும் குரங்கு.." PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com