HEADLINES | தீபாவளி கோலாகல கொண்டாட்டம் முதல் 18 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு வரை
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அயோத்தியில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
வங்க மற்றும் அரபிக் கடல்களில் புயல் சின்னங்கள் உருவாகி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்... பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் மக்கள் குதூகலம்...
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்... அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சி...
அயோத்தியில் பிரம்மாண்ட தீபோற்சவ விழாவில் 26 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனை...... சரயு நதிக்கரையில் நடந்த லேசர் ஷோ, கலை நிகழ்ச்சிகளை பலரும் ஆர்வத்துடன் கண்டுரசிப்பு...
தீபாவளியை கொண்டாட இறுதிக்கட்ட ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டிய மக்கள்... கடை வீதிகளில் நிரம்பி வழிந்த கூட்டம்...
தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் பயங்கர வெள்ளம்... சன்னதி பஜாரில் ஆறுபோல் சீறிப்பாய்ந்த தண்ணீர்...
தூத்துக்குடி மாநகரில் இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை... சாலைகளை சூழ்ந்த வெள்ளம்... மக்கள் பாதிப்பு...
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை... சென்னையில் மிதமான மழை பெய்யும் என கணிப்பு...
வரும் 23ஆம் தேதி திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை... 24ஆம் தேதி வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூருக்கு ஆரஞ்ச் அலர்ட்...
அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு... வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி...
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 24ஆம் தேதி பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி... பாஜக கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள் வெளியிடப்படும் என தகவல்...
மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் இறுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையை தொடங்க திட்டம்... பிகார் தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்...
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்... அவசரகால செயல்பாட்டு மையத்தை பார்வையிட்ட பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி...
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் திமுக அரசு நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம்... திமுக ஆட்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என விமர்சனம்...
காவிரிப் படுகை மாவட்டங்களில் நெல் சேதம் அடைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவது தவறான தகவல்... கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்...
நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பாடம் எடுக்க தேவையில்லை... உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு.... மின் தடை மீதான புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு...
சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கிய விவகாரம்... மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது காவல் துறை வழக்குப்பதிவு...
ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு... காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி...
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான கால அளவு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு... அனைத்து சமுகத்தினரும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்...
இந்திய வங்கிகளை வாங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பது அபாயகரமான செயல்.... விளைவுகளை அறியாமல் மேற்கொண்ட நடவடிக்கை என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்....
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா அரசும் சேரும் என அமைச்சர் சிவன் குட்டி அறிவிப்பு... கல்விக்கான நிதியை பெறவே சேர்வதாகவும், தற்போது பின்பற்றும் கல்விக்கொள்கையில் மாற்றம் இருக்காது என்றும் விளக்கம்..
தீபாவளியை முன்னிட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகளில் அதிக பணம் செலவிட வேண்டாம் என்ற அகிலேஷ் யாதவின் கருத்தால் சர்ச்சை... இந்திய பாரம்பரியத்தை அவமதித்துவிட்டதாக பாஜக கண்டனம்....
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு... பாலஸ்தீனர்கள் 38 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்...
மொசாம்பிக் அருகே நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளானதில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு... மாயமான மேலும் 5 இந்தியர்களை தேடும் பணி தீவிரம்...
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை எளிதில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி... மழையால் 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி....