\
தவெக-வில் இணைந்த நாதகவினர்
தவெக-வில் இணைந்த நாதகவினர்PT

நாகை | கொத்தாக நடந்த மாற்றம்.. தவெக-வில் இணைந்த 1000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர்!

நாகப்பட்டினத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினர் தவெக-வில் தங்களை இணைத்து கொண்டனர்.
Published on

நாகப்பட்டினத்தில் வடக்கு பொய்கை நல்லூர், தெற்குபொய்கை நல்லூர் மற்றும் செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில் அக்கட்சியில் தங்களை இணைந்து கொண்டுள்ளனர்.

தவெக-வில் இணைந்த நாதகவினர்
“அண்ணன், தம்பி என்பது வேறு.. கொள்கைன்னு வந்துட்டா..” - விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் சீமான்!

தவெக-வில் இணைந்த 1000-க்கும் மேற்பட்ட நாதகவினர்..

நாகையில் இன்று மாற்றுக் கட்சிகளை சேர்ந்தோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாகை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக-வை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோல தூத்துக்குடியிலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைந்துகொண்டுள்ளனர்.

தவெக-வில் இணைந்த நாதகவினர்
“இதயத்தை பிடிச்சு இழுக்குது.. மீளவே முடியல...” - அமரன் படத்தை மனம்திறந்து பாராட்டிய சீமான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com