"இவர் நடிகர் மட்டும் அல்ல நேர்மையான அரசியல்வாதி" நடிகர் மோகன்லால், விஜய்சேதுபதி இரங்கல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் மோகன்லால் மற்றும் விஜய்சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரங்கல் தெரிவித்த மோகன்லால் மற்றும் விஜய்சேதுபதி
இரங்கல் தெரிவித்த மோகன்லால் மற்றும் விஜய்சேதுபதி PT WEP

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைப் பிரபலங்களும் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு சில திரைபிரபலங்கள் இணையதளம் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மோகன்லால் எக்ஸ் வலைதள பதிவு
மோகன்லால் எக்ஸ் வலைதள பதிவு

அந்த வகையில், திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி எக்ஸ் வலைதள பதிவு
விஜய்சேதுபதி எக்ஸ் வலைதள பதிவு

விஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் மோகன் லால் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயம் செல்கிறது. ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

இரங்கல் தெரிவித்த மோகன்லால் மற்றும் விஜய்சேதுபதி
”முதலமைச்சராக அமர்ந்திருக்கவேண்டியவர் உடல்நலம் சரியில்லாததால்..” - சிங்கம்புலி உருக்கம்

அதே போல், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது.

எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு.

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com