\
மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்
மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்புதிய தலைமுறை

”முதலமைச்சராக அமர்ந்திருக்கவேண்டியவர் உடல்நலம் சரியில்லாததால்..” - சிங்கம்புலி உருக்கம்

திடீரென்று ஒரு கட்சி ஆரம்பித்து, அதில் வெற்றிப்பெற்று எதிர்கட்சி தலைவராக அமர்வது என்பது மிகப்பெரிய விஷயம். - சிங்கம்புலி
Published on

விஜயகாந்த் மறைவுக்கு திரைத்துறையினரை சேர்ந்த பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரைப்பட இயக்குநர் சிங்கம்புலி அவரின் அனுதாபத்தை நம்மிடையே பகிர்ந்துக்கொண்டார். "இது இக்கட்டான ஒரு சூழல். கேப்டன் இறந்துவிட்டார் என்ற செய்தி திரைதுறையினருக்கும், அவரின் தொண்டர்களுக்கும் பேரிழப்பு. திடீரென்று ஒரு கட்சி ஆரம்பித்து, அதில் வெற்றிப்பெற்று எதிர்கட்சி தலைவராக அமர்வது என்பது மிகப்பெரிய விஷயம். முதலமைச்சராக இருக்கவேண்டியவர், உடல்நலம் சரியில்லாததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது." என்றார். மேலும் இவர் கேப்டன் பற்றிக்கூறியதை கீழிருக்கும் வீடியாவில் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com