“நீ இல்லாத உலகத்திலே... “ பாடல் பாடி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

“பாடகி சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர்களே கிடையாது. அவரின் பாடலை நான் காரில் வெளியூர் செல்லும் சமயம் இரவு நேரத்தில் கேட்பேன்” - முதல்வர்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிண்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

முதல்வர்
பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பாடகி சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர்களே கிடையாது. அவரின் பாடலை நான் காரில் வெளியூர் செல்லும் சமயம் இரவு நேரத்தில் கேட்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘நீ இல்லாத இதயத்திலே’ ” - என்று கூறி, அவரின் பாடலைப்பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். முதல்வர் பாடியதை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com