\
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்PT

“மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..” முக ஸ்டாலின் பேச்சு!

என்னுடைய மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்..
Published on
Summary

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் மிசா கைது விவகாரத்தை எழுப்பிய முதல்வர் விஜய்க்கு பதிலளித்த முக ஸ்டாலின், தன் மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று வலியுறுத்தினார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், தவெக அரசு அவதூறு பரப்பி திசைதிருப்புகிறது, தன் தியாகத்துக்கு யாருக்கும் மதிப்பெண் போட தகுதி இல்லை என கடுமையாக தாக்கினார்.

தவெக ஆட்சியில் நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், திமுக மீதான சர்காரியா கமிஷன் குறித்து விமர்சித்ததோடு, திமுக தலைவர் முக ஸ்டாலினின் மிசா கைது குறித்தும் விமர்சித்திருந்தார். மேலும் மிசா குறித்து பேசிவிட்டு அவர் காட்டிய சைகை அரசியலில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்
முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்mk stalin

இந்நிலையில் மிசா வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் கைதானதை நிரூபிக்க சொல்லுங்கள் என்ற கருத்து தவெக தரப்பில் எழுப்பப்பட்ட நிலையில், தற்போது எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக முப்பெரும் விழா கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், “நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அந்த கொடுமை எல்லாம் பார்க்காமல் நான் தப்பிச்சேன். அதற்கு கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள். பேரவையில் தம்பி உதயநிதி கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் திசைதிருப்பவே அவதூறுகளை பரப்புகிறது தவெக அரசு. என்னுடைய மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை; என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை.

தவெக ஆட்சியில் இரண்டுக்கு இடையேதான் போட்டியே, ஒன்று மின்வெட்டி, இன்னொன்று அரிவாள் வெட்டு. நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

முதலமைச்சர் தினமும் SHOOTING MODEல்தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, மக்கள் முன் நடிக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது இதுதான் தவெக ஆட்சியின் வேலை” என கடுமையாக விமர்சித்து பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com