“தொண்டர்கள் அமைதியான வழிக்கு வரவேண்டும்” - ஸ்டாலின்

“தொண்டர்கள் அமைதியான வழிக்கு வரவேண்டும்” - ஸ்டாலின்
“தொண்டர்கள் அமைதியான வழிக்கு வரவேண்டும்” - ஸ்டாலின்

நாடு எதிர்கொள்ளும் சவாலை சந்திக்க ஆயத்தமாக இருக்குமாறு திமுக தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும் அரசுகள் தூக்கி எறியப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான அமைதியான அறநெறிக் களத்திற்கு நாம் தயாராகவேண்டும் என்றும் தோழமை சக்திகள் துணை நிற்பதாகவும் கூறியுள்ளார். 

நாடு எதிர்கொள்ளும் சவாலை அறிவோம் என்றும் அதனை சந்திக்க ஆயத்தமாகவும், ஆர்வத்துடனும் இருக்கிறோம் என சூளுரையை மேற்கொள்ள விழுப்புரத்தில் கூட வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். திமுக குடும்ப கட்சி என விமர்சனம் செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் வாழ்வோர் அனைவரும் தன் குடும்பமாக நினைக்கிற இயக்கம் திமுக எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com