முதலீடுகளை ஈர்க்க இன்று வெளிநாடு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. என்ன பிளான் தெரியுமா?
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று புறப்படுகிறார்.
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒருவாரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டாலராக உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் செல்லவுள்ளார்.
அதில், முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர், நாளை ஐரோப்பாவில் மாபெரும் தமிழ்க்கனவு 2025 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின், அங்குள்ள தமிழர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் செல்லும் முதல்வர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
லண்டனில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்கவும் முதல்வர் அழைப்பு விடுக்க உள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு செப்டம்பர் 8ஆம் தேதி முதல்வர் சென்னை திரும்பவுள்ளார்.
இதற்கு முன்பு முதல்வர் முக.ஸ்டாலின் 2022ல் துபாய், 2023ல் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.