Blood Moon
Blood Moon FB

Blood Moon | வானில் தோன்றும் ’பிளட் மூன்’ எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ..!

Blood Moon | வருகின்ற செப்டம்பர் 7-8ஆம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அன்றைய தினம் சந்திரன் இரத்த சிவப்பு நிறமாக மாறுவதைக் காணலாம்.. இந்த அதிசய நிகழ்வு இந்தியாவில் தெரியுமா? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
Published on
Summary

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதற்கு ரேலீ சிதறல் காரணமாகும், சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமனத்தின் போதும் சிவப்பு நிறத்தில் தோன்றும்.. அதன் விளைவு காரணமாகவே இந்த சிவப்பு நிலவு என்று சொல்லப்படும் இரத்த நிலவு ஏற்படுவதாக Space.com தெரிவித்துள்ளது .

முழு சந்திர கிரகணம் (Blood Moon) எப்போது? 

இந்தியாவில் முழு சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி (2025) அன்று நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழலில் சந்திரன் மறைந்து அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இது "ரத்த நிலவு" என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை போன்ற இந்திய நகரங்களில் இந்த வானியல் நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று வானியல் அறிவியலாளார்கள் தெரிவித்துள்ளனர்..

lunar eclipse to bring blood moon on September 7
lunar eclipse to bring blood moon on September 7x page

முழு நிலவான பெளர்ணமி நாளில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நிற்கும்போது இந்தச் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. வருகிற செப்டம்பர் 7ம் தேதி நிகழவிருக்கும் இந்த blood Moon காட்சியை ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதியைச் சேர்ந்த மக்கள் தெளிவாகக் காணலாம் எனக் கூறப்படுகிறது.

Blood Moon
Agni-5 Test|இந்தியாவின் அக்னி 5 ஏவுகனைச் சோதனை வெற்றி... பதறும் பாகிஸ்தான்.. ஏன் தெரியுமா?

Blood Moon-ஐ வெறும் கண்களால் பார்க்கலாமா?

இந்த கிரகணம் சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும், இது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாகும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் இதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணங்களைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

முழு சந்திர கிரகணம் என்றால் என்ன?

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது, ​​சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாகப்படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது .

Blood Moon
மார்ச் 14-ல் முழு சந்திர கிரகணம்.. வானில் தோன்றப் போகும் 'ரத்த நிலா’!

சந்திரன் ஏன் இரத்த சிவப்பு நிறமாக (Blood Moon) மாறுகிறது ?

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதற்கு ரேலீ சிதறல் காரணமாகும், சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமனத்தின் போதும் சிவப்பு நிறத்தில் தோன்றும்.. அதன் விளைவு காரணமாகவே இந்த சிவப்பு நிலவு என்று சொல்லப்படும் இரத்த நிலவு ஏற்படுவதாக Space.com தெரிவித்துள்ளது .

மேலும் முழு சந்திர கிரகணத்தின் போது, ​​பூமி நேரடியாக சூரிய ஒளியை சந்திரனை அடைவதைத் தடுக்கிறது. அதில் சில ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது.. அங்கு குறுகிய நீலம் மற்றும் ஊதா அலைநீளங்கள் சிதறடிக்கப்படுகின்றன.. இதனால் நீண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலைநீளங்கள் ஏற்படுகிறது..

Blood Moon தோன்றி மறையும் நேரம் குறித்த அட்டவணை

blood Moon Timings
blood Moon TimingsPT -News
Blood Moon
சந்திரனில் 2030க்குள் அணுமின் நிலையம்.. நிலவில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா, சீனா திட்டம்!

Blood Moon குறித்து நாசாவின் விளக்கம் என்ன?

இந்த சிவப்பு ஒளி சந்திரனை நோக்கி வளைந்து, நேரம் மற்றும் தேதியின்படி சிவப்பு நிற தோற்றத்தை அளிக்கிறது . பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசி, மேகங்கள் அல்லது எரிமலை சாம்பல் ஆகியவற்றைப் பொறுத்து சந்திரனின் நிறம் சிவப்பாக மாறுபடலாம்.. இது சிதறல் விளைவை தீவிரப்படுத்தி நிறத்தை ஆழப்படுத்தும். இந்த சிவப்பு தோற்றம் "இரத்த நிலவு" (blood Moon) என்று அழைக்கப்படுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது .

lunar eclipse to bring blood moon on September 7
lunar eclipse to bring blood moon on September 7FB

இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் ஆகும். இது ஒரு கண்கவர் வானியல் நிகழ்வு.. இது ஜோதிட ரீதியாகவும், வானியல் ரீதியாகவும் இந்த பிளட் மூன் கிரகணங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

கடைசியாக தோன்றிய முழு சந்திர கிரகணம் நவம்பர் 8, 2022 அன்று ஏற்பட்டது. இந்த ஆண்டின் (2025) முதல் முழு சந்திர கிரகணம் மார்ச் 13-14 ஆம் இரவில் நடந்தது.. அதனைத் தொட்ர்ந்து வருகிற செப்டம்பர் 7-8ஆம் தேத், (2025 )அன்று இரண்டாவது முழு சந்திர கிரகணம் நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த கிரகணத்தை நீங்கள் தவறவிட்டால், இதே போன்ற சந்திர கிரகணம் வருகிற ஜூலை 6, 2028 ஆம் ஆண்டு சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலைக் கடந்து செல்லும். அடுத்த முழு சந்திர கிரகணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தெரியும்.. டிசம்பர் 31, 2028 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தெரியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com