முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்Pt web

”இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது ” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தி வார்த்தையை தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on

திருச்சியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவாயிலில், ”கர்தவ்ய த்வார்” என்ற இந்தி வார்த்தை தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு, பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த சூழலில் தான், திருச்சி ரயில்வே அலுவலகத்திற்கு இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவாயில்
திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவாயில்Pt web

அப்பதிவில், ”பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.

முதல்வர் ஸ்டாலின்
தஞ்சை | ”இது வெறும் தேர்தல் அல்ல; எமோசன்” - தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து விஜய் பேச்சு.!

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, இந்த விவாகரம் குறித்து விமர்சித்திருந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ‘புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே . “கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” என்று பெயர். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை“ இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் தற்போது முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
”திமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே., காங்கிரஸ் சட்டப்பேரவைக்கு வரும்” - அமைச்சர் ரகுபதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com