போலீசார் விசாரணைPt web
தமிழ்நாடு
செஞ்சி | 10 நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுமி.. வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!!
சிறுமியை தேடும் பணி 10ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, கடந்த 12-ம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது காணாமல் போனார். இதுதொடர்பாக, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோப்புபடம்AI
அந்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். 10 நாட்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போன சிறுமி குறித்து எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
இந்தச்சூழலில் தான், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி மகேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தது உள்ளார்.
