சென்னை டூ நெல்லை: வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்ம நபர்கள்

சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தால் பரபரப்பு. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vande bharat
Vande bharatpt desk

நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை நடந்து வருகிறது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 1:50 மணிக்கு சென்னைக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10-40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும். அதன்படி வழக்கம் போல் நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

Vande bharat
Vande bharatpt desk

அப்போது ரயில், மணியாச்சி ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், மொத்தம் ஒன்பது இடங்களில் கண்ணாடி உடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Vande bharat
இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்து - சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன?

இதையடுத்து இந்த ரயில் நெல்லை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com