காந்தி நினைவு தினம்: மத நல்லிணக்க உறுதிமொழியேற்ற அமைச்சர்கள்

காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
மத நல்லிணக்க உறுதிமொழியேற்ற அமைச்சர்கள்
மத நல்லிணக்க உறுதிமொழியேற்ற அமைச்சர்கள்ட்விட்டர்

செய்தியாளர் - ரமேஷ்

மத வெறியர்களால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை, தமிழகம் முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மத நல்லிணக்க உறுதிமொழியேற்ற அமைச்சர்கள்
“வன்மம் கலந்த நோக்கத்தில் சொல்லியிருக்கிறார் ஆளுநர்” - முதலமைச்சர் விமர்சனம்!

‘நாடு சந்தித்து வரக்கூடிய மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும்’ என மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர். திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி நிகழ்வில் பங்கேற்றனர்.

மத நல்லிணக்க உறுதிமொழியேற்ற அமைச்சர்கள்
“மம்தா பானர்ஜியை அறையுங்கள்” - மே.வங்க பாஜக தலைவர் கருத்து; தொடரும் டிஎம்சி தலைவர்களின் எதிர்ப்பு!

அப்போது,

# காப்போம் காப்போம்! மனித நேயம் காப்போம்!

# விலக்குவோம் விலக்குவோம்! மதவெறியை விலக்குவோம்!

# காப்போம் காப்போம்! வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்!

# விலக்குவோம்! விலக்குவோம்! நமக்குள் உள்ள பிளவுகளை விலக்குவோம்!

# வேரறுப்போம் வேரறுப்போம்! மதவெறி சக்திகளை வேரறுப்போம்!

# வேரறுப்போம்! வேரறுப்போம்! பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம்!

# பிறப்பொக்கும் என்பதே, நமது அறமாகும். யாவரும் கேளிர் என்பதே, நமது பண்பாகும்.

# வேண்டும் வேண்டும்; அமைதியான இந்தியா வேண்டும்

என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com