“வன்மம் கலந்த நோக்கத்தில் சொல்லியிருக்கிறார் ஆளுநர்” - முதலமைச்சர் விமர்சனம்!

மகாத்மா காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வன்மம் கலந்த நோக்கத்துடன் கூறியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி - மகாத்மா காந்தி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி - மகாத்மா காந்தி - முதல்வர் மு.க.ஸ்டாலின்முகநூல்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சில கருத்துக்களை பேசியிருந்தார். அதில் காந்தி, சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலை ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ”தம்மை இந்து என அடையாளப்படுத்திக் கொண்ட மகாத்மா காந்தி, அனைத்து மதத்தவரின் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் .75 ஆண்டுகளுக்கு பிறகும் காந்தி மீதான கோபம் வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காந்தியை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர் கதையாகிவிட்டது.

மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி குறித்த முதல்வர் அறிக்கை
மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி குறித்த முதல்வர் அறிக்கை

காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருப்பது இதே வன்மம் கலந்த நோக்கத்தில்தான். காந்தியின் புகழை சிதைப்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சி நடைபெறுகிறது.

மதவெறியர்களால் காந்தியடிகள் கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதியை, மதநல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் கடமை, அன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com