'CSK-க்கு தடை விதிக்கணும்', 'அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஐபிஎல் பாஸ் வேணும்’.. சட்டமன்றத்தில் கலகல!

தமிழர்கள் அல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் விளையாட்டு துறை மானியை கோரிக்கையின்போது வலியுறுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி, ஜெய் ஷா
உதயநிதி ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி, ஜெய் ஷாகோப்புப் படம்

சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் பேசியதாவது, “தமிழகத்தில் அதிக இளைஞர்களால் ஈர்க்கப்படும் போட்டியான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியும் உள்ளது. தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும், ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை; ஆனால், தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து, நம் மக்களிடம் பெரும் வர்த்தக லாபத்தை அடைகிறது. தமிழக வீரர்கள் இல்லாத இந்த சி.எஸ்.கே. அணியை தமிழக அரசு விளையாட தடை செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான எஸ்.பி. வேலுமணி, “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை காண அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை. கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் பாஸ் கொடுப்பதில்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கையில், “அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி, ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் கேட்டிருந்தார். இங்கு 4 ஆண்டுகளாக சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுவது இல்லை. இப்போதுதான் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டிகளே நடைபெறாத நிலையில், இவர் யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார் என்பது தெரியவில்லை. நான் ஒவ்வொரு மேட்ச்க்கும் என்னுடைய சொந்த பணத்திலிருந்து 150 பேரை என்னுடைய தொகுதியில் இருந்து அழைத்துச் சென்று வருகிறேன்.

உதயநிதி ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி, ஜெய் ஷா
‘அஸ்வினும், தோனியும் செய்ததை..’ - கடைசிப் பந்தில் அடுத்தடுத்து சொதப்பிய ஹர்ஷல், தினேஷ் கார்த்திக்!

ஐபிஎல் போட்டியை நடத்துவது பி.சி.சி.ஐ., அது யார் என்றால், உங்களின் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் அதன் தலைவர். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டார். நீங்கள் அவரிடம் பேசி, அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு ஐந்து டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் காசு கொடுத்துக்கூட வாங்கிக் கொள்கிறோம். இல்லை என்றால் நீங்கள் வேறு ஏதாவது கணக்கில் சேர்த்து விடுவீர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com