நீட் தேர்வு ரத்து? திமுகவின் வாக்குறுதி குறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு ரத்து? திமுகவின் வாக்குறுதி குறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு ரத்து? திமுகவின் வாக்குறுதி குறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்
Published on
திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித்ததாக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிவிப்புகளை செய்து கொண்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளுடன் டெல்லி சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாயைச் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கவும், செங்கல்பட்டு, நீலகிரியில் தடுப்பூசி உற்பத்தி மையங்களை செயல்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கவும், கோவையில் புதிதாக எய்ம்ஸ் கல்லூரியை நிறுவுமாறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை திரும்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு ரத்து தொடர்பாக தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி குறித்து விளக்கமளித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித்ததாக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிவிப்புகளை செய்து கொண்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com