
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கூடுதல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இதயவியல் சிறப்பு மருத்துவர் தலைமையிலான குழு, செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக நேற்று கூறியிருந்தனர்.
இதையடுத்து அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இன்று அதுபற்றி தெரிவிக்கையில், “செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம் இன்னும் குறையவில்லை. வயிற்றுப்புண், குடல் புண்ணும் இருக்கின்றன. இதன் காரணமாக சிறப்புக் குழு காலையிலேயே சிகிச்சையை தொடங்கி உள்ளனர்.
மேற்கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுமா என்பது இன்று மாலையில் தெரியவரும்” என்றுள்ளனர்.