\
அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுட்விட்டர்

“சிறுபான்மையின மக்கள் பாஜகவிற்கு பதிலடி கொடுப்பார்கள்” - சிஏஏ குறித்த கேள்விக்கு சேகர்பாபு பதில்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சிறுபான்மையின மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் 171 மீன் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்பத்தூர் புதூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு மீன் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சிறுபான்மையின மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு
CAA | குடியுரிமை திருத்தச் சட்டம் | எதிர்ப்பு கிளம்பியது ஏன்? சட்டம் சொல்வது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com