லேட்டாக வந்த மாவட்ட செயலாளர்.. கடுப்பாகி காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்!

பேறறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு தாமதமாக வந்த மாவட்ட செயலாளரிடம் காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் ரகுபதியின் செயல் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ragupathi
ragupathifile manager

பேறறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள், மற்றும் திமுக பொறுப்பாளர்கள் இன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் இணைந்து மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 9 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் குறித்த நேரத்திற்கு வந்தாலும், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் வரவில்லை எனத் தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடக்கி வைக்க அமைச்சர் திட்டமிட்டிருந்தார்.

ragupathi
அறிஞர் அண்ணா யாருக்குச் சொந்தம்? - பிறந்தநாளில் இரு கழகங்களுக்கிடையே கலகம்!

நேரம் ஓடிக்கொண்டே இருந்த நிலையில், தொண்டர்களுடன் ஊர்வலமாக சாவகாசமாக வந்து சேர்ந்தார் செல்லப்பாண்டியன். இதனால் கடுப்பான அமைச்சர் ரகுபதி, “இதுபோல் தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டாம்” என்று செல்லப்பாண்டியனின் காலில் விழுந்து கை எடுத்து கும்பிட்டார்.

பின்னர் ஒருவழியாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டாலும், அமைச்சரின் செயல் திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படித்தியது.

ragupathi
கலைஞர், எம்ஜிஆர் இருவருக்கும் அண்ணா முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? பத்திரிகையாளர் சமஸ் பேட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com