விஜயகாந்த் மறைவு: ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்pt web

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

நடிகர் விஜயகாந்த் மறைவு
நடிகர் விஜயகாந்த் மறைவுபுதிய தலைமுறை

இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்
🔴LIVE | RIP Vijayakanth | “நல்ல நண்பருக்கு விடைகொடுத்து செல்கிறேன்” - கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

அப்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா விஜயகாந்தின் கைகளைப் பற்றி தனது ஆறுதலை தெரிவித்து, விஜயகாந்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் நிர்மலா சீதாராமன். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இதர தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இருந்தனர்.

இதன்பின் பேசிய அவர், “கஷ்டங்களைப் பார்க்க முடியாத அளவுக்கு இளகிய மனம் படைத்தவர் விஜயகாந்த். மத்திய அரசின் சார்பாக பிரதமர் மோடி என்னை அனுப்பிவைத்தார். விஜயகாந்த் அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து அவர்களுக்கு மரியாதை கொடுத்தவர். அரசியலில் அவரைப்போல மனிதநேயம் கொண்டவரை பார்ப்பது அரிது. தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம்” என தெரிவித்திருந்தார்.

அவரது மறைவு தொடர்பாக நேற்று எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்த அவர், “Captain Vijaykanth is no more. Condolences. Was known as ‘man with a golden heart.’ மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com