mano thangarajpt desk
தமிழ்நாடு
“அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்
“அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர்” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். இதில் பாளையம் பகுதியில் சாலை பணிகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்.
அமைச்சர் மனோ தங்கராஜ்
அப்போது அவர் கூறுகையில், “மேற்குவங்கம் முதல் தமிழகம் வரை பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில், மத்திய அரசு உள்நோக்கத்தோடும் குரோத பார்வையோடும் அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனை நடத்துகின்றனர். அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும். அமலாக்கத்துறை சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர்” என கூறினார்.
அமைச்சர் பொன்முடியின் காரில் சிக்கிய டைரி, கோப்புகள்; டிஜிட்டல் ஆவணங்களால் இறுகும் தடயவியல் விசாரணை!

