\
Minister Keerthana Calls Today a Significant Day
விஜய் - கீர்த்தனாPt web

முதல்வர் பதிலுரை.. ‘முக்கியமான நாள் இன்று’ - அமைச்சர் கீர்த்தனா

பொதுவாழ்வில் மற்ற நாட்களை விடச் சற்று கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் சில உண்டு; அத்தகைய ஒரு முக்கியமான நாட்களில் ஒன்றுதான் இன்று என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் (செப்டம்பர் 8) தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. இந்தச்சூழலில் தான், இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலுரை அளிக்கவிருக்கிறார். முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்PTI

இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய் ”எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது” எனப் பேசியிருந்தது பேசுபொருளாகியிருந்து.

இந்தச்சூழலில் தான், பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றவிருக்கிறார்.

இந்தச்சூழலில் தான், இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ”முக்கியமான நாள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பொது வாழ்க்கையில் சில நாட்கள் மற்ற நாட்களைக் காட்டிலும் சற்று கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அத்தகைய நாள் தான் இன்று. மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேச உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minister Keerthana Calls Today a Significant Day
இது தலைநகரமா? இல்லை கொ* நகரமா? - எம்.பி. கனிமொழி கேள்வி!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com