ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு: அமைச்சர் காமராஜ் விளக்கம்

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு: அமைச்சர் காமராஜ் விளக்கம்

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு: அமைச்சர் காமராஜ் விளக்கம்
Published on

ரேஷனில் உளுத்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் புதிய தலைமுறை நிருபருக்கு அளித்த பேட்டியில், ரேஷனில் ஒரு கார்டுக்கு ஒருவகை பருப்பு மட்டுமே கொடுக்கப்படும். அட்டைதாரர்களுக்கு பருப்பு தொடர்ந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பொதுவிநியோக திட்டம் மிகச் சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு பருப்பை ஒரு கிலோ கொடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளோம். உளுத்தம் பருப்புதான் வேண்டும் என மக்கள் எங்களிடம் கேட்கவில்லை. ஒரு அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு என்பதை உறுதி செய்து வருகிறோம். 

துவரம் பருப்பு, கனடியன் லென்டில் அல்லது மசூர் பருப்பு ஆகியவைகளில் எது கிடைக்கிறதோ அதை 13000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்துதோம். அதேபோல் உளுந்து 7000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு கோடியே 34 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் உளுந்து வழங்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டிலிருந்து எல்லா ஆட்சி காலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com