தமிழ்நாடு
ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு ஓபிஎஸ்தான் காரணம்: அமைச்சர் குற்றச்சாட்டு
ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு ஓபிஎஸ்தான் காரணம்: அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே காரணம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு பொதுவிநியோக திட்டத்திற்கு நீட்டிப்பு வழங்காமல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலம் தாழ்த்தியதே ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார்.