மெட்ரோ வாகன நிறுத்தத்தில் வாகனம் நிறுத்துறீங்களா..? அப்போ இது தெரிஞ்சுக்கோங்க!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
chennai metro station
chennai metro stationfacebook

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு 50 ரூபாய் வரையும் கார்களுக்கு 100 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வாகன நிறுத்தமிடங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்கோப்பு படம்

அதன்படி, ”திருவொற்றியூர், காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், நந்தனம், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக்நகர், திருமங்கலம், எழும்பூர் என 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை.

கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதந்திர பாஸ் வழங்கும் வசதி, விம்கோ நகர் பணிமணை, ஸ்ரீதியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

chennai metro station
ஈரோடு: கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கடந்த 30 நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com