ஈரோடு: கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கார் விபத்து
ஈரோடு கார் விபத்துபுதிய தலைமுறை

செய்தியாளர்: D.சாம்ராஜ்

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். கொசு வலை வியாபாரியான இவர், தனது மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8) மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன் நேற்றிரவு கரூர் சென்றுவிட்டு மீண்டும் சிறுமுகை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் வந்த கார் ஒன்றுடன், நெசவாளர் காலனி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Car accident
Car accidentpt desk

இதில் முருகன், ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த நித்திஷா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆலம்புனஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு கார் விபத்து
ஆவடி இரட்டை கொலை: செல்போன் மூலம் சிக்கிய வடமாநில இளைஞர் – பின்னணி என்ன?

இந்த விபத்தில் எதிரே காரில் வந்த கல்லூரி மாணவர்கள லேசான காயத்துடன் தப்பினார். இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com