mayiladuthurai magistrate worst comment on sexual brutality happened to 3-year girl
mayiladuthurai magistrate commentPT

மயிலாடுதுறை | சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து மோசமான பேச்சு.. ஆட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மயிலாடுதுறை ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on

மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.

mayiladuthurai magistrate worst comment on sexual brutality happened to 3-year girl
மாணவர்கள், பெண்கள் மீது மரியாதை வைத்து சகோதரிகளாக பாதுகாக்க வேண்டும் - இயக்குநர் சமுத்திரக்கனி

அப்போது, சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார்.

அப்போது, ”இந்த சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.

மூன்றரை வயது சிறுமி சிறுவனின் முகத்தில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம். விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பலரும் மகாபாரதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

mayiladuthurai magistrate worst comment on sexual brutality happened to 3-year girl
"வீட்ல இருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு போயா.." - செய்தியாளர் சந்திப்பில் சீமான் பரபரப்பு பேச்சு!

இந்நிலையில், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மயிலாடுதுறை ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com