பனிமூட்டம்
பனிமூட்டம்pt desk

மயிலாடுதுறை |விலகிய மழை மேகம்... சூழந்த பனிமூட்டம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியது. கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 7:30 மணிக்கு மேலும் பனியின் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரமுடியாமல் வீட்டில் முடங்கினர். காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர்.

பனிமூட்டம்
சென்னையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து போலிசார்...

சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவியதால் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com