மயிலாடுதுறை | வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் இந்து சமய அறநியைத்துறைக்கு உட்பட்ட அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிசார வேல்வியில் தோன்றிய யானையை சிவன் மீது ஏவிவிட, சிவபெருமான் அந்த யானையை அழித்து வீரச்செயல் நிகழ்த்திய தலமான இக்கோயிலில் சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார்.
பல்வேறு சிறப்புகள் உடைய இக்கோயிலில் ரஷ்யா, கனடா, கஜகஸ்தான் ஜெர்மன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 40 வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். இதையடுத்து கோயிலை சுற்றி வந்து வீரட்டேஸ்வரர் சன்னதியில் அமர்ந்து அனைவரும் ஓரே நேரத்தில் பக்திப் பரவசத்தில் ஓம் நமச்சிவாய என்று பலர் கண்ணை மூடி மெய்மறந்து தியானம் ;செய்தனர்.
அப்போது ஒருசிலர் பக்திப் பரவசத்தில் கண்ணீர் மல்க தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் கோயில் குருக்கள் வீபூதி பூசினார். தலைமையேற்ற யுலியா சிவனின் பெருமைகளை உடன் வந்தவர்களுக்கு விளக்கினார்.