மயிலாடுதுறை: புல்லட் பைக் புடைசூழ சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்த இபிஎஸ் - அதிமுகவினர் உற்சாகம் #Video

சீர்காழியில் 200 புல்லட் பைக் புடைசூழ சாரட் வண்டியில் ஊர்வலம் வந்த எடப்பாடி பழனிசாமி.... 2.5 கிலோ வெள்ளி வாள், 5 அடி உயர இரட்டையிலை பொருத்திய செங்கோலை நினைவு பரிசாக வழங்கிய அதிமுகவினர்...

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மார்கோணி கார்டனில் சிறுபான்மையினர் உட்பட 3 ஆயிரம் பேர் பவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக சீர்காழிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை 200 புல்லட் பைக்குகள் புடைசூழ சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

ADMK
ADMKpt desk

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் சாரதியாக மாறி சாரட் வண்டியை ஓட்டி வந்தார். இந்நிலையில், விழாவின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

EPS
புதுக்கோடை | “நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக..” - திமுக MP M.M.அப்துல்லா செய்த நெகிழ்ச்சி செயல்

அதிமுக பிரமுகரும் பொறியாளருமா மார்கோணி 2.5 கிலோ எடையிலான 5.5 அடி நீளம் கொண்ட வெள்ளி வாளை நினைவு பரிசாக வழங்கினார். அதே போல் மாவட்ட அதிமுக சார்பாக 5 அடி உயரம் கொண்ட வெண்கலத்தாலான இரட்டை இலை பொருத்திய செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com