தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் - மயிலாடுதுறை பாஜக தலைவர் மும்பையில் கைது!

தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம்
மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம்pt desk

செய்தியாளர்: மா.ராஜாராம்

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனகர்த்தர் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தருமபுரம் ஆதீனகர்த்தர்
தருமபுரம் ஆதீனகர்த்தர்pt desk

அதன்கீழ் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம்
ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தேடிவந்தனர்.

இதையடுத்து பாஜக மாவட்ட தலைவர் அகோரம் முப்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை சுற்றி வளைத்து கைது செய்ததனர்.

தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி மயிலாடுதுறைக்கு அழைத்து வருகின்றனர். அகோரத்தை இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com