May Day | உழைக்கும் வர்கத்திற்கான தினம் இன்று - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

இன்று மே தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை காணலாம்...
மே தினம் - முதல்வர் வாழ்த்து
மே தினம் - முதல்வர் வாழ்த்துபுதிய தலைமுறை

“தொழிலாளர் சமுதாயம் வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துக்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “எட்டு மணிநேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி உயிர்ப்பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுப்படுத்தும் நாள் தான் மே தினம்.தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம்.

மே தினம் - முதல்வர் வாழ்த்து
மெட்ரோ வாகன நிறுத்தத்தில் வாகனம் நிறுத்துறீங்களா..? அப்போ இது தெரிஞ்சுக்கோங்க!

தொழிலாளர்களின் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்துவரும் திராவிட மாடல் அரசின் சார்பில்,தொழிலாளர் சமுதாயம் வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துக்கள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகத் தொழிலாளர்கள் தினத்தையொட்டி அரசியல்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

உழைப்பில்தான் உடல் என்றும் உறுதி பெறும். அவர்களின் உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

பாஜக அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவதற்கு தொழிலாளர் வர்க்கம் உறுதி கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் உரிமை பதாகையை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்போம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

அம்பேத்கர் வகுத்தளித்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும், தொழிலாளர்கள் விரோத பாசிச மோடி அரசை வீழ்த்திடவும் உறுதியேற்போம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

”மோடி அரசின் தாராளமய, கார்ப்பரேட்மயக் கொள்கைகளை எதிர்த்தும், பறிக்கப்பட்ட உரிமைகளையும், உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரங்களையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டு, நவீன கொத்தடிமை நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்த ஜனநாயக முறையில் போராடுவோம்.”

இந்திய ஜனநாயக கட்சி - பாரிவேந்தர்

உழைப்பவர் வாழ்ந்தால் உலகம் செழிக்கும். பெருமைமிகு உழைப்பாளர்கள் அனைவரும் உடல்நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சி - அன்புமணி ராமதாஸ்

“தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் வென்றெடுக்க ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.”

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். அவர்களது முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்.

த.வெ.க தலைவர் விஜய்

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com