‘இந்திய ஜனநாயக புலிகள்’ மன்சூர் அலிகான் யாருடன் கூட்டணி? அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடா?

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மன்சூரலிகான்
மன்சூரலிகான்pt web

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதியில் எந்த கட்சி களமிறங்குவது என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுகவும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. வேட்பாளர்கள் தேர்வு, நேர்காணல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சிகள் தங்களது முதற்கட்ட, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை, இந்திய ஜனநாயகப் புலிகள் என மாற்றியிருந்த மன்சூர் அலிகான் நாடாளுமன்ற தேர்தலில் தானும் களமிறங்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்pt web

இப்படியாக பரபரப்பாக சென்றுகொண்டிருந்த தேர்தல் அரசியலில்... இன்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், அக்கட்சியின் பிற தலைவர்கள், அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதிமுக தொகுதிப் பங்கீட்டுக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இதில், தனது கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கினால் அதிமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய ஜனநாயகப் புலிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன் துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது.

அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் எனும் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப்புலிகள் என சமீபத்தில் மாற்றினார். அதனைத் தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மன்சூரலிகான்
“ஆரணி தொகுதில் போட்டியிடுகிறேன்” - இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் அறிவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com