மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன் pt web

”எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” - திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேட்டி !

அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைந்துக் கொண்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று மாலை 4 மணிக்கு ராஜினாமா செய்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Published on
Summary

அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைந்துக் கொண்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று மாலை 4 மணிக்கு ராஜினாமா செய்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுகவின் ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ- ஆகவும் இருந்த மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். இன்று, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “திராவிடக் கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற தலைவராகவும், தமிழக உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரு தலைவராகவும், தமிழகத்தின் உரிமைகளை எங்கேயும் அடகு வைக்காத ஒரு தலைவராகவும், அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும், தான் எடுத்திருக்கிற முயற்சிகளை சிறப்பாக செய்து முடிக்கிற ஒரு தலைவராகவும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என்பதை நான் பார்த்து, சிந்தித்து எடுத்த முடிவுதான் இது.

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த போது
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த போதுpt web

நான் என்னை திமுக-வில் இணைத்துக் கொண்டதற்கான காரணம், எஞ்சிய என்னுடைய வாழ்க்கையில் திராவிட கொள்கையினை பாதுகாக்க கூடிய இயக்கத்தில், அதனை தலைமையேற்றிருக்கக் கூடிய தலைவரின் சிந்தனைகளை நிறைவேற்றக் கூடிய தொண்டனாக என்னை இணைத்து பணியாற்ற இங்கு வந்துள்ளேன். தொடர்ந்து, என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று 4 மணிக்கு ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

மனோஜ் பாண்டியன்
பீகாரின் அரைநூற்றாண்டு வரலாறு: லாலு, நிதிஷ்: இருவரின் கதை!

தொடர்ந்து, அதிமுக குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், “ அதிமுக-வை தோற்றுவித்த தலைவரும், அதற்கு பின்னால் கட்சியை பாதுகாத்தவரும் எந்த சூழ்நிலையிலும் மற்ற இயக்கத்திடம் அதிமுக-வை அடகு வைக்கவில்லை. ஆனால். இன்று, அதிமுக வேறு ஒரு இயக்கத்தை நம்பி அதன் சொல்படி நடந்து வருகிறது. என்ன கொள்கைகளுக்காக அதிமுக உருவாக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு பாஜக-வின் கிளை கழகமாக இன்று செயல்படுகிறது. எந்த அடிப்படையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது என்று தெரியவில்லை.

மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன் pt web

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க அதிமுக இன்று அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், திராவிட கொள்கைகளை பாதுகாக்கக் கூடிய இயக்கம் திமுக என்பதை உணர்ந்து இன்று திமுக-வில் இணைந்திருக்கிறேன். நான் எடுத்திருக்கிற முடிவு உறுதியான முடிவு. தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் யாரை தோற்கடிக்க விரும்புகிறார்களோ, அதே நபரை தோற்கடிக்க நானும் என்னுடைய முயற்சியை எடுப்பேன்” என்றார்.

முதலமைச்சர் என்ன சொன்னார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ உழைப்பினை அங்கீகரிக்காமல் ஒவ்வொரு தொண்டர்களையும் விரட்டக் கூடிய எடப்பாடி பழனிசாமியின் நோக்கத்தையும், சிந்தனையும் புரிந்து கொண்டு இங்கே வந்த போது, என்னை புரிந்து கொண்டு புன்முறுவலோடு திமுக-விற்கு முதல்வர் ஸ்டாலின் என்னை வரவேற்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

மனோஜ் பாண்டியன்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com