\
மாணிக்கம் தாகூர் - உதயநிதி ஸ்டாலின்
மாணிக்கம் தாகூர் - உதயநிதி ஸ்டாலின்web

”நீட், Petrol உயர்வு குறித்து பேசல; மேலருந்து Order வந்திருச்சா”- உதயநிதியை தாக்கிய மாணிக்கம் தாகூர்

மக்கள் பிரச்னை என்றால் மௌனம் சாதிப்பதாகவும், மற்றதற்கு மைக்கை பிடிக்க போட்டிபோடுவதாகவும் உதயநிதி மற்றும் எடப்பாடி பழனிசாமியை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
Published on
Summary

தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி பேசிவரும் நிலையில், நீட் பிரச்னை, பெட்ரோல் விலை உயர்வு பிரச்னை போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு மட்டும் ஏன் மௌனம் காக்கிறார்கள், பாஜக மேலிடம் சொல்லுக்கு கட்டுப்படுகிறார்களா என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து களம்கண்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் இணைந்து செயல்படும் என தங்களுடைய கூட்டணியை உறுதிசெய்தது. அதாவாது திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு.

DMK Seat Sharing Finalised 28+1 Seats Allotted to Congress
காங்கிரஸ், திமுகட்விட்டர்

இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸை உதயநிதி விமர்சித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் பதிலுக்கு விமர்சித்திருந்தார்.

இந்தசூழலில் தற்போது எதிர்க்கட்சி தரப்பினரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரையும் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் - உதயநிதி ஸ்டாலின்
’BJP உடன் backdoor politics.. பேசவே worth இல்லை..’ திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்!

மக்கள் பிரச்னை என்றால் மௌனமாகி விடுகிறார்கள்..

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மாணிக்கம் தாகூர், “NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது…

4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்…

ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல! 🤐

திரு.உதயநிதி ஸ்டாலின்…

திரு.பழனிசாமி…

ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா?

மக்கள் பிரச்சனை வந்தா மவுனம்…

அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி!

தமிழக மக்கள் கேட்கிறார்கள்:

இந்த அமைதிக்கு காரணம் என்ன?

அல்லது… “மேலிருந்து” பேசக்கூடாது என்று group call Order வந்திருச்சா?” என விமர்சித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் - உதயநிதி ஸ்டாலின்
31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.. அரசியல் கலாச்சாரமாக உருவெடுக்கிறதா கூட்டணியாட்சி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com