சௌந்தரராஜன்
சௌந்தரராஜன்PT WEB

கள்ளக்குறிச்சி | மனைவி மீது சந்தேகம்... நண்பனை கட்டிப்போட்டு அடித்த நபர்!

உளுந்தூர்பேட்டையில் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட நபரொருவர், நண்பனின் கை, கால்களைக் கட்டிப் போட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
Published on

செய்தியாளர் - ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (42). இவருடைய நெருங்கிய நண்பர் ஐயப்பன். இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.

நேற்று மது போதையில் ஐயப்பன், வீட்டில் தனது மனைவியிடம் முதலில் தகராறு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று “உனக்கும் என் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா?” எனக் கேள்வி கேட்டு சௌந்தரராஜனிடம் தகராறு செய்துள்ளார்.

மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சௌந்தரராஜன்
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சௌந்தரராஜன்

பின் நேற்று இரவு உளுந்தூர்பேட்டைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த சௌந்தரராஜனை வழிமறித்த ஐயப்பன், மீண்டும் அவரிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தனது உறவினர்களுடன் சேர்ந்து, சௌந்தரராஜனின் கைகால்களைக் கட்டிப் போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்திய போது, புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சௌந்தரராஜனை மீட்டு சிகிச்சைக்காக அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சௌந்தரராஜன்
தேர்தல் பத்திரம் | SBI Vs SC | 4 சட்டத்திருத்தங்கள்.. வாரிவழங்கிய நிறுவனங்கள்.. இதுவரை நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com