ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மிரட்டல்|போலியாக எழுதப்பட்ட கடிதம்.. சிக்கிய பள்ளி தாளாளர்; முழு பின்னணி

பழைய வழக்கில் சாட்சியாக இருந்த தனது பள்ளி வாகன ஓட்டுநரை சிக்க வைப்பதற்காக பள்ளி தாளாளரே, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பள்ளி தாளாளர், ஆம்ஸ்ட்ராங், திருமதி ஆம்ஸ்ட்ராங்
பள்ளி தாளாளர், ஆம்ஸ்ட்ராங், திருமதி ஆம்ஸ்ட்ராங்pt web
Published on

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

மிரட்டல் கடிதம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 22 பேரை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். இத்தகைய சூழலில், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் கடந்த வாரம் வந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web

அந்த மிரட்டல் கடிதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் படூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பரை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இல்லை என்றால் ஆம்ஸ்ட்ராங்கின் 4 வயது மகளை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், புகை வெடிகுண்டு வீசி குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

திருமதி. ஆம்ஸ்ட்ராங் B.A., B.L.
திருமதி. ஆம்ஸ்ட்ராங் B.A., B.L.

இதையடுத்து சதீஷை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்பது தெளிவானது. சதீஷை சிக்க வைப்பதற்காக இது போன்ற கடிதம் அனுப்பபப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. தனது பெயரில் ஏற்கனவே காவல்நிலையம் ஒன்றிக்கு இதே போல மிரட்டல் கடிதம் அனுப்பட்டடுள்ளதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளி தாளாளர், ஆம்ஸ்ட்ராங், திருமதி ஆம்ஸ்ட்ராங்
மணமுடித்த முதல்நாள் இரவே துடிக்கதுடிக்க மனைவியை கொன்ற கணவன்; ரத்த வெள்ளத்தில் முடிந்த காதல்திருமணம்!

விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இதன் பிறகு சதீஷை விடுவித்த போலீசார், கேளம்பாக்கம் போலீசாரிடம் இது குறித்து தெரிவித்து விசாரணைக்கு உதவும்படி செம்பியம் போலீசார் கேட்டுக்கொண்டனர். கேளம்பாக்கம் போலீசார், சதீஷ் பின்னணி குறித்து விசாரித்தபோது, அவர் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் என்பது தெரிந்தது. அந்த பள்ளி தாளாளர் அருண் ராஜ் என்பவர் ஏற்கனவே மிரட்டல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.

தாளாளர்
தாளாளர்

இதன் பின்னணியில் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். விபரங்கள் ஒன்றொன்றாக வெளிவந்தன.

கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரோஸ் நிர்மலா என்பவர் பணியாற்றி உள்ளார். கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளியின் தாளாளரான அருண்ராஜ், பள்ளி அங்கீகாரம் தொடர்பாக ரோஸ் நிர்மலாவை அணுகிய போது நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரத்தில் அருண்ராஜ், செங்கல்பட்டில் உள்ள ரோஸ் நிர்மலா வீட்டின் முன்பு ஆபாச போஸ்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி தாளாளர், ஆம்ஸ்ட்ராங், திருமதி ஆம்ஸ்ட்ராங்
ஆகஸ்ட் 19-ல் துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு!

சிக்கிய தாளாளர்!

பிறகு ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சாட்சியாக இருந்தது ஓட்டுநர் சதீஷ் என்பதால் அவரை பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை சிக்க வைக்க கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பள்ளி தாளாளர் அருண்ராஜை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்ய கைது செய்யப்பட்ட அருண் ராஜை கடலூர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட அருண் ராஜிடம் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி தாளாளர், ஆம்ஸ்ட்ராங், திருமதி ஆம்ஸ்ட்ராங்
உசிலம்பட்டி: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து - திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com