கோவை : ஈஷா யோகாவில் தொடங்கியது "மஹா சிவராத்திரி" - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

"ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.
மஹா சிவராத்திரி
மஹா சிவராத்திரி PT WEB

கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மேடையில் பேசுகையில், "சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

நம் பாரத கலாச்சாரத்தில் மஹா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஷாவில் நடத்தப்படும் மஹாசிவராத்திரி விழாவானது தனித்துவமானது; மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக திகழ்கிறது" என்றார்.

இதனையடுத்து பேசிய சத்குரு, "இன்று நடைபெறும் மஹாசிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30 ஆவது மஹாசிவராத்திரி விழாவாகும். 1994 ஆம் ஆண்டு நாம் நடத்திய மஹா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவு முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார். இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது.

மஹா சிவராத்திரி
தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நிலை என்ன? - குற்றச்சாட்டுகளும், உண்மை நிலையும்

கடந்த ஆண்டு மஹாசிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஹாசிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும்.

சத்குரு
சத்குரு

எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்" என்றார்.

மஹா சிவராத்திரி
2 ஆண்டுகளாக "மனித மலத்தை" குடிநீரில் கலந்து வைத்த கொடூர நபர் ; சிசிடிவியால் அம்பலம்!

மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு மற்றும் பிரம்மமுஹூர்த்த வேளையில் லட்சக்கணக்கான மக்கள் சத்குருவுடன் ஓம் நமச்சிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் துணைக் குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com