தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நிலை என்ன? - குற்றச்சாட்டுகளும், உண்மை நிலையும்

தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான முக்கியத்துவம் எப்படி உள்ளது. தியாகிகள் எந்த அளவில் போற்றப்படுகிறார்கள் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சுதந்திர போராட்ட வீரர் பாலசுப்ரமணியம்
சுதந்திர போராட்ட வீரர் பாலசுப்ரமணியம்pt web

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மதிக்கப்படுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த குற்றச்சாட்டு பேசுபொருளாகியுள்ளது. ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பதிலில் தியாகிகளுக்கு தமிழ்நாடு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த பேராசிரியர் வீ.என்.அரசு, "வ. உ.சி. 100வது பிறந்தநாள், 150வது பிறந்தநாள் என தமிழக அரசால் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. வ.உ.சி மட்டுமின்றி அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் மதித்து அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறது தமிழக அரசு" என்கிறார்.

நாட்டுக்காக போராடியவர்களை சாதிய அடையாளங்களை புகுத்தியது திராவிட அரசுகள்தான் என பாஜகவின் மாநிலச் செயலாளரான பேராசிரியர் சீனிவாசன் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியின் போது மாவட்டங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை வைத்த போதும் சாதிய பிரச்சனை வருகிறது என மீண்டும் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது வெட்கக்கேடானது என சாடியுள்ளார் பேராசிரியர் சீனிவாசன்.

பெரிய அளவில் வெளியில் தெரிந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பல்வேறு சலுகைகள் கிடைத்தாகவும் நாட்டுக்காக போராடிய தங்களின் வாழ்வும் போராட்டமாகவே தொடர்கிறது என்று கூறுகிறார் நூறு வயதை எட்ட உள்ள சுதந்திர போராட்ட வீரர் பாலசுப்ரமணியம். மாநில அரசால் கிடைக்கும் சிறிய சலுகைகள் கூட மத்திய அரசால் கிடைக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

அடிமைப்டுத்தப்பட்ட நம் நாடு, சுதந்திர காற்றை சுவாசிக்க எண்ணற்ற போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்தனர். வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்தனர். அப்படி பட்டவர்களை அரசாங்கங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனும் நெஞ்சில் ஏந்தி கொண்டாட வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com