Bike adventurept desk
தமிழ்நாடு
மதுரை: சாலையில் தீப்பொறி பறக்க இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் - பொதுமக்கள் அச்சம்!
மதுரையில் சாலையில் தீப்பொறி பறக்க இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையில் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் இளைஞர்கள் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன பதிவு எண் இல்லாமலும் வாகனப்பதிவெண்ணை மறைந்த படி பைக்குகளை பயன்படுத்தி வருவதால் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Bike adventurept desk
இந்நிலையில், மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே இளைஞர் ஒருவர், பைக்கின் ஸ்டாண்ட் தரையில் உரசும்படி தீப்பொறி தெறிக்க வாகனத்தை ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக இதுபோன்று இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.