சமூக வலைதளங்களில் வைரல் டாபிக்காக மாறிய அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்! அப்படி என்ன இருக்கு?

அம்பானி மகன் திருமணத்திற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் டாபிக்காக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் என்ன?... அழைப்பிதழில் என்ன இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
ஆனந்த் அம்பானி - ராதிகா
ஆனந்த் அம்பானி - ராதிகா முகநூல்

அம்பானி மகன் திருமணத்திற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் டாபிக்காக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் என்ன?... அழைப்பிதழில் என்ன இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

ஆனந்த் அம்பானி - ராதிகா
10th, 12th மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. காலை 6 மணிக்கு முன்பே அரங்கிற்கு வந்தார் விஜய்!

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ஜூலை 12-ஆம் தேதி ராதிகா மெர்ச்செண்டை கரம் பிடிக்கிறார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் வெளிநாடுகளிலும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தியாவின் சினிமா நட்சத்திரங்கள், தொழிலபதிபர்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டனர். திருமண தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அழைப்பிதழ் வழங்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண அழைப்பிதழ் கண்டவுடன் வாயை பிளக்கும்வகையில் கவர்ந்திழுக்கிறது.

அழைப்பிதழா அல்லது சிறிய கோவிலா என வியக்கும் அளவிற்கு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் வடிவமைப்பில் இருக்கும் அழைப்பிதழின் கதவை திறந்து பார்த்தால் மந்திரம் ஒலிக்கிறது. அதனுள்ளே வெள்ளித் தேரில் தங்க மூலாம் பூசிய கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பெருமாள், லட்சுமி உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் திருமண அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது. மேலும், உள்ளே இருக்கும் பெட்டியை திறந்து பார்த்தால் திருமண விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்குள் 2 பெட்டிகளில் சுவாமி சிலைகள் உள்ளன. ஆடம்பரமான இந்த திருமண அழைப்பிதழை தனது 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்று பலருக்கும் வழங்கி வருகிறார் ஆனந்த் அம்பானி. பக்தி மயமாக இருக்கும் அழைப்பிதழின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com